56. புகழ்த்துணை நாயனார்

அமைவிடம் : temple icon.thillaivaz anthanar
வரிசை எண் : 56
இறைவன்: சொர்ணபுரீஸ்வரர்
இறைவி : அழகாம்பிகை
தலமரம் : வில்வம்
தீர்த்தம் : ?
குலம் : ஆதிசைவர்
அவதாரத் தலம் : அழகாபுத்தூர்
முக்தி தலம் : அழகாபுத்தூர்
செய்த தொண்டு : சிவ வழிபாடு
குருபூசை நாள் (முக்தி பெற்ற மாதம்/நட்சத்திரம்) : ஆவணி -ஆயில்யம்
வரலாறு : செருவிலிபுத்தூர் என்னும் தலத்தில் அவதாரம் செய்தார். நாட்டில் பஞ்சம் வந்தபோதும் நாள்தோறும் சிவனுக்குத் திருமஞ்சனம் ஆட்டும் பணியைத் தொடர்ந்தார். ஒரு நாள் பசி மயக்கத்தில் திருமஞ்சனக் குடத்தோடு இறைவன் மேல் சாய்ந்தார். அவரது கனவில் பஞ்சம் தீரும் வரையில் உமக்கு நாள்தோறும் ஒரு பொற்காசு அளிப்போம் என்று கூறினார். அவ்விதமே அவருக்குத் தினமும் ஒரு பொற்காசு இறைவன் அளிக்க அதனைக் கொண்டு பசி தீர்ந்து தம் பணியைத் தொடர்ந்தார்.
முகவரி : அருள்மிகு. சொர்ணபுரீஸ்வரர் திருக்கோயில், அழகாபுத்தூர் – 612401 கும்பகோணம் வட்டம், தஞ்சை மாவட்டம்
கோயில் திறந்திருக்கும் நேரம் : காலை 06.00 – 12.00 ; மாலை 04.00 – 08.00
தொடர்புக்கு : தொலைபேசி : 0435-2466939

இருப்பிட வரைபடம்


மாலயனுக் கரியானை மஞ்சனமாட் டும்பொழுது
சாலவுறு பசிப்பிணியால் வருந்திநிலை தளர்வெய்திக்
கோலநிறை புனல்தாங்கு குடந்தாங்க மாட்டாமை
ஆலமணி கண்டத்தார் முடிமீது வீழ்த்தயர்வார்.

- பெ.பு. 4134
பாடல் கேளுங்கள்
 மாலயனுக்கு


Zoomable Image

நாயன்மார்கள் தலவரிசை தரிசிக்க    பெரிய வரைபடத்தில் காண்க